


Master Class on Investing
Master Class on Investing-இல் என்ன என்ன இருக்கும்...
- Proxy Investing என்றால் என்ன? அது எந்தளவுக்கு முக்கியமான ,Effective ஆன ஒரு Strategy. அதற்கான case studies நிறைய.
- Head winds என்றால் என்ன, Tail Winds என்றால் என்ன, Sectoral Rotation என்றால் என்ன?
ஏன் அதைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
அதை தெரிந்து வைத்திருப்பது எந்தளவுக்கு முதலீட்டில் நமக்கு உபயோகமாக இருக்கும்.
அதற்கான உதாரணங்களுடன் இதையெல்லாம் பார்க்கலாம்.
- அடுத்து Growth Part,
ஒரு பங்கு Multibagger ரிட்டன் கொடுக்க வேண்டும் என்றால், அதற்கு Business Growth எவ்வளவு முக்கியம்.
எந்த அளவுக்கு வளர்ச்சி இருந்தால் ஒரு பங்கு Multibagger ரிட்டன் கொடுக்கும் என்பது பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம்.
நிறுவனங்களுக்கு வளர்ச்சி தான் மிக முக்கியம் என்றால், அந்த வளர்ச்சி எங்கு இருந்து வரும், எதெல்லாம் வளர்ச்சியை கொண்டு வரும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
காரணம், வளர்ச்சி இல்லாத பங்கை எவ்வளவு மலிவான விலையில் வாங்கினாலும் அது நல்ல முதலீடாக இருக்காது.அங்கு நாம் எதிர்பார்க்கும் Multibagger ரிட்டன் நிச்சயம் கிடைக்காது.
அதற்கு நிறைய Case studies பார்க்கலாம்.
- அடுத்து Margins பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம். மார்ஜின் மட்டுமே நிறுவனத்தின் தரம் பற்றி நிறைய சொல்லும். (With Case studies )
- அடுத்து Valuation Part
எல்லோரையும் குழப்பும் வேல்யுவேஷன் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒரு பங்கிற்கு வளர்ச்சி மிக முக்கியம்.அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் வளர்ச்சி மட்டுமே முக்கியம் இல்லை.
ஒரு பங்கில் என்ன தான் வளர்ச்சி இருந்தாலும் ,ஒரு லெவலுக்கு மேல் அதற்கு அதிக விலை கொடுக்கக்கூடாது.
There should be something left on the table.
பணம் செய்வதற்கு கொஞ்சமாவது அங்க இடம் இருக்க வேண்டும்.
வளர்ச்சி இருக்கிறது என்பதற்காக கண்மூடித்தனமாக ,எந்த விலைக்கும் ஒரு பங்கை வாங்கக்கூடாது.
அப்படி வாங்கினால் வருடக்கணக்கில் மாட்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். அதிக வளர்ச்சி இருந்தும் கண்மூடித்தனமான விலையில் வாங்கியதால் மட்டும், பல வருடங்களாக எந்த ரிட்டனும் கொடுக்காத பங்குகள் சந்தையில் நிறைய இருக்கு. அது பற்றி நிறைய உதாரணங்கள் பார்ப்போம்.
அதே போல், வளர்ச்சியை மட்டும் பார்த்து கண்மூடித்தனமாக ஒரு பங்கை வாங்கிய பிறகு, நாம் நம்பிய வளர்ச்சி நிறுவனங்களிடம் வரவில்லை என்றால் , ஆட்டம் முடிந்தது. அதன் பிறகு எத்தனை வருடங்கள், ஒரே பங்கில் stuck ஆக வேண்டியது இருக்கும் என்று சொல்ல முடியாது.
பல வருட அனுபவம் இருக்கும் முதலீட்டாளர்கள் கூட இங்கு தான் தவறு செய்வார்கள்.
So, Growth & Value இந்த இரண்டையும் சரிசமமாக Balance செய்யத்தெரியனும். இரண்டுமே முக்கியம்.
Growth Investing,Value Investing என்று தனித்தனியாக குழப்பிக் கொள்ளக்கூடாது.
ஒரு நல்ல முதலீடு என்பது நல்ல வளர்ச்சி உள்ள பங்கை Reasonable விலைக்கு வாங்குவது. அது தான் நல்ல முதலீடாக இருக்க முடியும்.
High Quality பங்குகள் ரொம்ப மலிவான விலைக்குக் கிடைப்பது மிக அரிது. அதனால் High quality பங்குகளை Reasonable விலையில் நமக்கு வாங்கத்தெரிந்தால் அதுவே போதும்.
அதற்கு என்ன என்ன ரேஷியோ உபயோகமாக இருக்கும். என்ன என்ன strategy இருக்கு .அதை எப்படி உபயோகப்படுத்தனும் என்பதைப் பார்க்கலாம்.
PE ratio எங்க எல்லாம் நம்மை ஏமாற்றும், அதே PE எங்க மிக உபயோகமாக இருக்கும் என்று நிறைய உதாரணங்களுடன் பார்க்கலாம்.
- அடுத்து நிறைய பேருக்கு பிடித்த / நிறைய பேர் எதிர்பார்க்கும் Technical Analysis.
Technical Analysis ,Traders மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்கிற ஒரு எண்ணம் நிறைய பேருக்கு இருக்கு.
நீண்டகால பங்கு முதலீட்டிற்கும் Techincal Analysis , அழகான Entry and Exit signals கொடுக்கும்.
Business Headwinds, Tailwinds, Sectoral Rotation, Technical Analysis இது எல்லாமே அழகாக ஒன்றுக்கொன்று Interconnect ஆகும். அது எப்படி என்று சமீபத்திய உதாரணங்களுடன் தெரிந்து கொள்ளலாம்.
அதில் Stage Analysis முக்கியமான ஒன்று.. எவ்வளவு தூரம் ஒரு பங்கை Ride செய்யலாம் என்பதை stage Analysis தெளிவாக சொல்லும். அதையும் நிறைய Case studies உடன் பார்க்கலாம்

- கடைசியில் Exit strategy..
அதில்,
Fundamental Based Exits
Valuation Based Exits
Technical Based Exits
புதிதாக சந்தைக்கு வந்தவர்கள், ஒரு பங்கை வாங்கும் போது , யாராவது சொல்கிறார்கள் என்று சுலபமாக வாங்கிடுவிடுவார்கள்.
ஆனால் எப்போது வெளியே வர வேண்டும் என்று தெரியாமல் மாட்டிப்பாங்க. சந்தையில் இருக்கும் அனைத்துப் பங்குகளும், வாங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் வெச்சுட்டே இருக்கும் பங்குகளாக இருக்காது.
ஒரு நாள் கண்டிப்பாக வெளிய வந்து தான் ஆகனும். அப்படி வெளிய வரத்தெரியவில்லை என்றால், வந்த லாபமும் போய், கடைசியில் நட்டத்திற்கு விற்று , பிறகு பங்குச்சந்தை எல்லாம் சூதாட்டம் என்று சொல்ல வேண்டிய நிலை தான் வரும்.
Note, ஒரு பங்கின் விலை Dive அடிச்சு பல மடங்கு இறங்கிடுச்சுன்னா அது ஒரே நாளில் எல்லாம் நடக்காது.
அதற்கு முன் சந்தை,
Fundamentally, Technically, Valuation wise இப்படி பல வழிகளில் வெளியேறுவதற்கு signal கொடுத்திருக்கும். அந்த Process சில வாரங்கள் , மாதங்களாக நடந்து கொண்டு தான் இருக்கும்.
நமக்கு தான் அதையெல்லாம் புரிந்து கொள்ளத் தெரியாமல் தவற விட்டிருப்போம்.
இவை அனைத்தையும் Master Class வெபினாரில் தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக Enjoy பண்ணுவீங்க.
முக்கியமாக, மேல் சொன்ன Filters-க்குள் பொருந்தும் பங்குகளை Filter செய்ய,
Few set of Stock Screens . அதுவும் இருக்கும்.
Rs.5,000.00 Rs.7,000.00